கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை


கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
x

கடன் தொல்லையால் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

மொடக்குறிச்சி

மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி எஸ்.பி.எஸ். காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 38). இவருடைய மனைவி கவுரி (34). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கவுரி கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. அதை கட்ட முடியாமல் தவித்துள்ளார். மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு வற்புறுத்தியதால் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள ஒரு கிணற்றில் கவுரி பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கிணற்றில் இருந்து கவுரியின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கவுரி கடன் தொல்லை தாங்காமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.


Related Tags :
Next Story