அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்


அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து  பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 7:04 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். திடீரென நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை


மயிலாடுதுறை அருகே அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். திடீரென நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அடிக்கடி மின்தடை

மயிலாடுதுறை அருகே நீடூர் நெய்வாசல் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு 8 மணிக்கு மின் தடை செய்யப்பட்டது. ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மின்சாரம் வழங்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நீடூர் கடை வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார், மின்வாரிய ஊழியர்கள் ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊர் முக்கியஸ்தர்களான பாபு, ரவி, மதிவாணன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலை மறியல்

இதில் சீரமைப்பு பணி மேற்கொண்டு உடனே மின்சாரம் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் தொடங்கிய இந்த சாலை மறியல் போராட்டம் 1 மணி நேரம் நீடித்தது. நள்ளிரவில் ஒரு மணிநேரம் நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதித்ததோடு, அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story