மழைப்பொழிவு இல்லாததால்முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்தது


மழைப்பொழிவு இல்லாததால்முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்தது
x
தினத்தந்தி 19 April 2023 12:15 AM IST (Updated: 19 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மழைப்பொழிவு இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்தது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசன ஆதாரமாக இந்த அணை விளங்குகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக மழைப்பொழிவு இல்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறையத்தொடங்கி உள்ளது. 152 உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 116.05 அடியாக குறைந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து முற்றிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story