பர்கூர் அருகே போக்குவரத்து வசதியில்லாததால்10 கி.மீ. தூரம் நடந்து பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள்


பர்கூர் அருகே போக்குவரத்து வசதியில்லாததால்10 கி.மீ. தூரம் நடந்து பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 3 Jan 2023 1:00 AM IST (Updated: 3 Jan 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மாணவ-மாணவிகள்

ஈரோடு

பர்கூர் அருகே போக்குவரத்து வசதியில்லாததால் தினமும் 10 கி.மீ. தூரம் நடந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் சென்று வருகிறார்கள்.

போக்குவரத்து வசதி இல்லை

ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பர்கூர் மேற்கு மலைப்பகுதியான ஓசூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்துக்கு ஒன்னகரை, தம்புரெட்டி, ஓசூர், கோவில்நத்தம், பெரிய செங்குளம், சின்ன செங்குளம், அக்னிபாவி, கொங்காடை, பெரியூர் ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சென்று படித்து வருகின்றனர்.

ஒன்னகரை, தம்புரெட்டி, ஓசூர் ஆகிய மலைகிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு சென்று வர பள்ளிக்கல்வித் துறை மூலம் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கொங்காடை, செங்குளம், கோவில்நத்தம் பகுதிகளில் இருந்து பள்ளிக்கூடத்துக்கு சுமார் 5 கி.மீ. தூரம் உள்ளது. இங்கிருந்து பள்ளிக்கூடத்துக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்படவில்லை.

கோரிக்கை

இதனால் இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் தினமும் 10 கி.மீ. தூரம் நடந்தே பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். யானை, புலி, சிறுத்தை போன்ற கொடிய வனவிலங்குகளின் நடமாட்டத்துக்கு இடையே அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். அப்போது வனவிலங்குகள் அவர்களை தாக்கும் அபாயம் உள்ளது. மேலும் கால் வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இதனால் சிலர் பள்ளிக்கூட படிப்பை பாதியிலேயே விட்டு விடுகின்றனர்.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர அவரது பள்ளிக்கூட படிப்பு முக்கியமாக உள்ளது. ஆனால் போக்குவரத்து வசதியில்லாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தவேண்டிய நிலை உள்ளது. எனவே கொங்காடை, செங்குளம், கோவில்நத்தம் பகுதிகளில் இருந்து ஒசூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வர பஸ் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story