முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு


முன்விரோதம் காரணமாக  இரு தரப்பினர் மோதல்; 11 பேர் மீது வழக்கு
x

உப்புக்கோட்டையில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

தேனி

உப்புக்கோட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் வைரமணி (வயது 38). கார் டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் வீரகுமார் (45). விவசாயி. இவர்கள் இருவருக்கும் இடையே மண்டு கருப்பசாமி கோவில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் வைரமணி நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வீரகுமார், அவரது மகன் சுருளிராஜ், உறவினர்களான பஞ்சவர்ணம், வரலட்சுமி, கற்பகரோஜா ஆகியோர் சேர்ந்து வைரமணியை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வீரகுமார், அவரது மகன் சேர்ந்து வைரமணியை அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தினர். மேலும் வைரமணி தரப்பை சேர்ந்தவர்கள் வீரகுமாரை அரிவாளால் வெட்டினர்.

இதையடுத்து படுகாயமடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வைரமணி கொடுத்த புகாரின் பேரில் வீரகுமார் உள்பட 5 பேர் மீதும், வீரகுமார் கொடுத்த புகாரின்பேரில் காளி ராஜா, வைரமணி, அசோக்குமார், விஜய் ஆனந்த், கோகுல்ராஜ், அஸ்வின் குமார் ஆகிய 6 பேர் மீதும் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story