நீர்வரத்து குறைந்ததால் காவிரியில் குறையும் வெள்ளம்


நீர்வரத்து குறைந்ததால்  காவிரியில் குறையும் வெள்ளம்
x

நீர்வரத்து குறைந்ததால் காவிரியில் வெள்ளம் குறைந்தது.

ஈரோடு

மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது. எனவே மேட்டூர் அணையில் இருந்து காவிரிக்கு திறக்கும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு இருக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது.அந்த தண்ணீர் அப்படியே உபரியாக காவிரிக்கு திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக இருந்த தண்ணீர் நேற்று ஒரே நாளில் 55 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்மட்டம் கிடுகிடு என குறையத்தொடங்கி உள்ளது. ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றிலும் நேற்று காலையில் இருந்து தண்ணீரின் மட்டம் குறையத்தொடங்கியது. காவிரிக்கரை கல் மண்டப படிக்கட்டுகள் வரை அலையடித்துக்கொண்டு இருந்த வெள்ள மட்டம் கீழ் இறங்கி வருகிறது. இருப்பினும் நேற்று மாலை வரை முனியப்பன்நகர் செல்லும் ரோட்டில் இருந்து தண்ணீர் வடியவில்லை. ஆதவன்-மாதவன் கோவிலை தண்ணீர் சூழ்ந்து சென்றது. நேற்று ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் மூலம் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முகாம்களில் தங்கி இருந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. தண்ணீரின் அளவை தாசில்தார் பாலசுப்பிரமணியம் தலைமையில் வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story