கடும் வறட்சியால் முக்காணியில் தாமிரபரணி ஆறு வறண்டது


கடும் வறட்சியால் முக்காணியில் தாமிரபரணி ஆறு வறண்டது
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடும் வறட்சியால் முக்காணியில் தாமிரபரணி ஆறு வறண்டது

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

கடும் வறட்சியால் முக்காணியில் தாமிரபரணி ஆறு வறண்டது.

வறண்ட தாமிரபரணி

பொதிகை மலையில் பிறந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளம் கொழிக்க செய்யும் தாமிரபரணி ஆறு புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக போதிய பருவமழை பெய்யாததால் தாமிரபரணி ஆற்றில் குடிநீருக்கு குறைந்தளவே தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதனால் பெரும்பாலான இடங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் தாமிரபரணி ஆறு வறண்டு காணப்படுகிறது. அங்குள்ள உறைகிணறு அருகில் சிறிதளவே தண்ணீர் தேங்கியுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

முக்காணியில் சுமார் 70 ஆண்டுகள் பழமைவாய்ந்த தரைமட்ட பாலமும், அதன் அருகில் புதிய உயர்மட்ட பாலமும் உள்ளது. மழைக்காலத்தில் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தும், உயர்மட்ட பாலத்தை தொடும் அளவுக்கு வெள்ளம் செல்வது உண்டு.

தற்போது 2 பாலங்களின் அடியிலும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தண்ணீரின்றி வறண்டதால் பாலங்களில் புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.


Next Story