பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னை அருகே பெருமாள்குப்பம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இதில் பெருமாள்குப்பம் மட்டுமல்லாது சுற்றுப்புற ஊர்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் பலத்த மழை பெய்து வருகின்றது. தொடர் மழை காரணமாக பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி பள்ளி கட்டிடம் சேதம் அடையாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story