நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைவு


நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால்  பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைவு
x

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஈரோடு

பவானிசாகர்

நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

பவானிசாகர் அணை

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையும், தமிழகத்தின் 2-வது பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங்குகிறது.

நீர்வரத்து குறைந்தது

கடந்த வாரம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 911 கன அடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 82.49 அடியாக இருந்தது.

நேற்று மாலை 6 மணி அளவில் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 361 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 900 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


Next Story