கண்மாயில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகின


கண்மாயில் தண்ணீர் இல்லாததால் நெற்பயிர்கள் கருகின
x

நரிக்குடி அருகே சம்மனேந்தல் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி சேதமடைந்துள்ளது.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே சம்மனேந்தல் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகி சேதமடைந்துள்ளது.

தண்ணீர் திறப்பு

தற்போது வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதன் காரணமாக கிருதுமால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.மேலும் சம்மனேந்தல் கண்மாய் பகுதிக்கும், வைகை அணையிலிருந்து தண்ணீர் வரும் பகுதிக்கும் இடையே சிறிதளவு தூரமே உள்ள நிலையில் தனி கால்வாய் இல்லாததால் சம்மனேந்தல் கண்மாய் பகுதிக்கு தண்ணீர் செல்லமுடியாத நிலை இருந்து வருகிறது.

கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கப்பட்டு கட்டனூர், இருஞ்சிறை, உலக்குடி, மானூர், மறையூர், நரிக்குடி உள்பட பல்வேறு கண்மாய்கள் நிரம்பிய போதிலும் நரிக்குடி பகுதியில் ஒருசில கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

நெற்பயிர்கள் கருகின

கிருதுமால் நதியின் ஒருசில கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.மேலும் வைகை அணை நீரானது சம்மனேந்தல் பகுதி எல்லை வழியாக செல்லும் நிலையில் 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேலப்பருத்தியூர் கண்மாய் நிறைந்துள்ள நிலையில், உபரிநீரை சம்மனேந்தல் கண்மாய்க்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி தண்ணீர் சென்றால் நெற் பயிர்கள் கருகிவருவதை தவிர்க்க முடியும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து சம்மனேந்தல் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story