நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.
தேனி
பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து கடந்த 12-ந்தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் மழை குறைந்ததால் நீா்வரத்து சீரானது. இதன்காரணமாக நேற்று முதல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனையொட்டி கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story