கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்


கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்
x

கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி

மயிலாடுதுறை காந்திஜி சாலையில் மாமரத்து மேடையில் இருந்து ெரயில்வே ஜங்ஷன் சாலையில் உள்ள கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சிமெண்டு சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ- மாணவிகள் நடந்தும், சைக்கிளிலும் சென்று வருகின்றனர். மேலும் ெரயிலடி ஜங்ஷன் சாலை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் காந்திஜி சாலைக்கு எளிதாக செல்லும் ஒரு வழியாக கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு சாலையில் நடந்து செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பழங்காவிரி வாய்க்காலில் இருந்து ஜங்ஷன் சாலை வரை சாலையின் ஓரத்தில் ஏராளமாக குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்த சாலையில் எப்போதும் துர்நாற்றம் வீசுவதால் மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் பூக்கடை தெரு வழியாக சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளி சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி சாலையை தூய்மைப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story