ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்


ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்
x

ஏரியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்


ஜோலார்பேட்டை ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சியில் ஏரி கொட்டாய் பகுதியில் ஏரி உள்ளது. அந்த ஏரியில் தற்போது பெய்த மழையால் நீர் நிரம்பி வழிகிறது. ஏரியில் குப்பைக் கழிவுகளை கொட்டி வருகிறார்கள். இதனால் ஏரியின் நீர் பாதிக்கப்படுவது மட்டுமின்றி ஏரியில் வாழக்கூடிய மீன் போன்ற உயிரினங்கள் பாதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஏரியில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story