2021 மழையின் போது மழை நீர் தேங்கிய இடங்களில் தற்போது நீர் தேங்கவில்லை - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், மழை பாதிப்பு பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
2021 மழையின் போது மழை நீர் தேங்கிய இடங்களில் தற்போது நீர் தேங்கவில்லை. மின்பழுது ஏற்பட்டாலோ, கழிவுநீர் தேங்கினாலோ உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1913 என்ற எண்ணில் உதவி தேவைப்படுபவர்கள் அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெருமழை வந்தாலும் மக்கள் பாதிப்படையாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த பாதிப்பும் அடையாத வகையில் பணிகள் நடந்து வருகின்றன. நாளை சென்னை முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.