பல்லவர் காலத்து அம்மன் கோவிலில் 4 டன் எடையில் ஒரே கல்லிலான விமானம் கிரேன் மூலம் கோபுரத்தில் நிலை நிறுத்தப்பட்டது
பல்லவர் காலத்தைய அம்மன் கோவிலில் 4 டன் எடையுள்ள விமானம் கிரேன் மூலம் கோவில் கோபுரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
கலசபாக்கம்
பல்லவர் காலத்தைய அம்மன் கோவிலில் 4 டன் எடையுள்ள விமானம் கிரேன் மூலம் கோவில் கோபுரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.
கலசபாக்கம் தாலுகா, லாடவரம் ஊராட்சிக்குட்பட்ட கெங்கநல்லூர் கிராமத்தில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட மிக பழமை வாய்ந்த போலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு ெசய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பழுது அடைந்த கோவில் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தற்போது கருவறை, அர்த்த மண்டபம் கருங்கல்லால் கட்டிமுடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கருவறையின் மீது சுமார் 27அடி உயரத்தில் கருங்கல்லில் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது கோபுர உச்சியில் 4 அடி உயரத்தில் 4 அடி அகலத்தில் சுமார் 3 டன் எடை கொண்ட ஒரே கல்லால் செய்யப்பட்ட விமானம், கோபுர உச்சியில் அமைக்கும் விழா நடைபெற்றது. இதில் விமானத்திற்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து கிரேன் மூலம் ஒரே கல்லால் செய்யப்பட்ட விமானத்தை தூக்கி கோபுர உச்சியில் பொருத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கருங்கல்லில் கோபுரம் அமைக்கும் பணிக்கு பண உதவிகளை ராணிகோபால் என்ற பக்தர் செய்து வருகிறார்.