வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வார விடுமுறையையொட்டி  கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 13 Feb 2023 12:15 AM IST (Updated: 13 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது. இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது குளிர்காலம் முடிவடையும் சூழ்நிலை உள்ளதால் வார விடுமுறையையொட்டி நேற்று சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் கல்வி சுற்றுலா வந்து இருந்தனர். கொடைக்கானலில் நேற்று பகல் நேரத்தில் நிலவிய இதமான வெப்பம் காரணமாக அவர்கள் மன்னவனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், மோயர்பாயிண்ட், பில்லர்ராக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களுக்கு சென்று பார்த்து ரசித்தனர். பின்னர் அவர்கள் நட்சத்திர ஏரியிலும் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருவதின் காரணமாக சுற்றுலா தொழிலில் நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story