துரியோதனன் படுகள நிகழ்ச்சி


துரியோதனன் படுகள நிகழ்ச்சி
x

மேல்மலையனூரில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம்

செஞ்சி,

மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. மேலும் மகா பாரத சொற்பொழிவு, தெரு கூத்து உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக துரியோதனன் படுகள நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும், பஞ்சபாண்டவர்களுக்கும் பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கடைவீதி பகுதியில் பிரம்மாண்டமான துரியோதனன் சிலை செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து மாலையில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.


Next Story