முக்கூடலில் தசரா விழா


முக்கூடலில் தசரா விழா
x

முக்கூடலில் உள்ள கோவில்களில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடலில் தசரா பத்தாம் நாள் விழா கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் வைத்து நவராத்திரி கொலு பூஜை நடைபெற்றது. பத்தாம் நாள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல் சடையப்பபுரம் சக்தி விநாயகர் கோவில், முக்கூடல் பத்ரகாளியம்மன் கோவில், ஆலடி அம்மன் கோவில், கசமாடன் கோவில், சந்தன மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நவராத்திரி பூஜை, அன்னதான நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.



Next Story