திருச்செந்தூர் கோட்டத்தில் தசரா குழுக்கள் தற்காலிக மின்இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்
திருச்செந்தூர் கோட்டத்தில் தசரா குழுக்கள் தற்காலிக மின்இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோட்டத்தில் தசரா குழுக்கள் தற்காலிக மின்இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என்று திருச்செந்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மின் இணைப்பு
குலசேகரபட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தசரா பந்தலுக்கு தேவையான விளக்குகள், தெருக்களில் அலங்கார விளக்குகள் மற்றும் தற்காலிக கடைகளுக்கு தேவையான மின்சாரத்தை பெறுவதற்கு தற்காலிக மின் இணைப்பு பெறலாம். இதற்காக இணையதளம் மூலமாக பதிவு செய்து தங்கள் பிரிவுக்கு உட்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் பட்சத்தில் உடனே மின் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஒத்துழைப்பு
மேலும் இது பற்றி தகவல்களை அறிய அந்தந்த பகுதியில் உள்ள பிரிவு அலுவலக உதவி பொறியாளரை திருச்செந்தூா் - 94458 54802, காயாமொழி - 94458 54805, பரமன்குறிச்சி - 94458 54806, காயல்பட்டிணம் - 94458 54810, ஆறுமுகநோி - 94458 54808, குரும்பூா் - 94458 54809, சாத்தான்குளம் நகர் - 94458 54812, சாத்தான்குளம் கிராமம் - 94458 54716, பழனியப்பபுரம் - 94458 54813, நாசரேத் - 94458 54815, ஆழ்வாா்திருநகரி - 94458 54817, மெஞ்ஞானபுரம் - 94458 54816, உடன்குடி நகர் - 94458 54820, உடன்குடி கிராமம் - 94458 54821, படுக்கப்பத்து - 94458 54822, நடுவக்குறிச்சி - 94458 54823 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே, பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.