புழுதி பறக்கும் சாலை; வாகன ஓட்டிகள் அவதி
நெல்லை ஸ்ரீபுரத்தில் புழுதி பறக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்தனர்.
திருநெல்வேலி
நெல்லை ஸ்ரீபுரத்தில் இருந்து டவுன் ஆர்ச் வரை உள்ள சாலையின் இருபுறமும் சாலை அமைக்கும் பணி மற்றும் சாலையோரங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையோரம் தோண்டப்பட்ட மண், கனரக வாகனங்கள் சாலையின் இருபுறமும் செல்லும் போது புழுதி புகையாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக காலையில் அந்த வழியாக வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் சிறுவர்கள், மாணவ, மாணவிகள் எனவே அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் அல்லது சாலையில் கிடக்கும் மண் மீது தண்ணீரை அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story