போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் நிற்கும் மின்கம்பங்கள்
உடுமலை ரெயில் நிலையம் அருகே சவுதா மலர் லே-அவுட் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளன.
உடுமலை ரெயில் நிலையம் அருகே சவுதா மலர் லே-அவுட் பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் மின்கம்பங்கள் உள்ளன.
சாலையின் நடுவில் மின்கம்பங்கள்
உடுமலை ரெயில் நிலையம் அருகே சவுதா மலர் லே-அவுட் பகுதி உள்ளது. இங்கு சாலை அகலப்படுத்தப்பட்ட நிலையில் அங்கிருந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இங்கு நீண்ட தூரத்துக்கு சாலையின் நடுவில் மின்கம்பங்கள் நிற்கின்றன.
நீண்ட காலமாக இவை சாலையின் நடுவில் இருப்பதால் இந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. தளி ரோட்டில் இருந்து இந்த ரோடு வழியாகவும் நகருக்குள் வாகனங்கள் வருகின்றன. அதிகமான வாகனங்கள் வரும்போது மின்கம்பங்கள் வாகன ஓட்டிகளுக்கு சவாலான விஷயமாக உள்ளன.
மாற்றி அமைக்கப்படுமா?
குறிப்பாக கனரக வாகனங்கள் அதிகமாக வரும் நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவது ஒருபுறமிருக்க, இந்த மின் கம்பங்களால் விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
எனவே சாலையின் நடுவே உள்ள மின்கம்பங்களை சாலையின் ஓரமாக மாற்றியமைத்தால் வாகனங்கள் சிரமமின்றி செல்ல முடியும். அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு இங்கு தங்கு தடையற்ற வாகன போக்குவரத்துக்கு நடவடிக்கை எடுப்பார்களா?.