மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

பாளையங்கோட்டையில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது

திருநெல்வேலி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நெல்லை மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நெல்லை நகர்ப்புற கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள மின்வினியோக செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்திற்கு நெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்துகுட்டி மற்றும் பிற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story