மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட பரமன்குறிச்சி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உள்பட்ட தூத்துக்குடி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோவில்பட்டி கோட்டத்துக்கு உள்பட்ட கழுகுமலை உதவி பொறியாளர் அலுவலகத்திலும், 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உள்பட்ட வல்லநாடு உதவி பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணிக்கு நடக்கிறது.
எனவே மேற்கண்ட தினங்களில் தங்கள் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை சரிசெய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.