மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
x

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு செயற்பொறியாளர் அசோக்குமார் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், மின்நுகர்வோர் தங்களது மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்யக்கோரி தகுந்த ஆவணங்களுடன் மனு அளித்தால், உடனடியாக விசாரணை செய்து மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்து தர வேண்டும். மழைக்காலம் வரவிருப்பதை முன்னிட்டு மின் அலுவலர்கள் மற்றும் மின் ஊழியர்கள் கூடுதல் கவனமாக செயல்பட்டு, தடையில்லாத மின்சாரம் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறும் குறை தீர்க்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, குறைகளை நிவர்த்தி செய்திட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் மின் நுகர்வோர்களிடம் இருந்து 7 மனுக்கள் பெறப்பட்டு கோரிக்கை-குறைகளை நிவர்த்தி செய்திட உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதில் பெரம்பலூர் மின்கோட்ட உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் மின்பொறியாளர்கள், மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டனர்.


Next Story