மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் -3-ந்தேதி நடக்கிறது
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் -3-ந்தேதி நடக்கிறது
மதுரை
மதுரை வடக்கு மின்பகிர்மான கோட்டத்திற்குட்பட்ட நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 3-ந்தேதி(வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர் மேலமடை உள்பட வடக்கு கோட்ட மின்நுகர்வோர்கள் தங்கள் கோரிக்கைகளை மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் செயற்பொறியாளர் முன்னிலையில் நடைபெறுகிற கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை நேரிலோ மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம். இந்த கூட்டமானது காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
Related Tags :
Next Story