விழுப்புரம் மண்டல மின் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் கடலூரில் 29-ந் தேதி நடக்கிறது


விழுப்புரம் மண்டல    மின் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம்    கடலூரில் 29-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 4:37 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மண்டல மின் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் கடலூரில் 29-ந் தேதி நடக்கிறது/

விழுப்புரம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழக விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் கடலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 11.30 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார் தலைமை தாங்குகிறார். எனவே மின்நுகர்வோர்கள் மின்வாரியத்துறை தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின் வருகிற 28-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04142-223132, 04142-223969 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திர விஜய் தெரிவித்துள்ளார்.


Next Story