மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்


மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
x

மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி-திருத்தங்கல் மெயின் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். இதில் வெம்பக்கோட்டை அருகில் உள்ள சிப்பிப்பாறை ஊராட்சி மன்ற நிர்வாகம் கொடுத்த கோரிக்கை மனுவில், சிப்பிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மைப்பாறை கிராமத்துக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதாகவும், தொடர்ந்து பல ஆண்டுகளாக குறைந்த மின் அழுத்த மின்வினியோகம் ஆகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் கூறி விருதுநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவை பெற்ற மின்வாரிய அதிகாரி தேன்மொழி அதற்கான தளவாட பொருட்களை ஒதுக்கீடு செய்து ஒரே வாரத்தில் வெம்பக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மைப்பாறை கிராமத்துக்கு மின்சாரம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதேபோல் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 12 பேர் மின் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய கோரி மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற அதிகாரி தேன்மொழி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது சிவகாசி மின் அதிகாரி பாவநாசம் உடன் இருந்தார்.


Next Story