வேளாண்துறை அலுவலர்களுக்கு 'இ-நாம்' திட்ட பயிற்சி


வேளாண்துறை அலுவலர்களுக்கு இ-நாம் திட்ட பயிற்சி
x

வேளாண்துறை அலுவலர்களுக்கு இ-நாம் திட்ட பயிற்சி வழங்கப்பட்டது என விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி கூறினார்.

விருதுநகர்


வேளாண்துறை அலுவலர்களுக்கு இ-நாம் திட்ட பயிற்சி வழங்கப்பட்டது என விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி கூறினார்.

'இ-நாம்' திட்டம்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் விற்பனை குழுவின்கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விருதுநகர், ராஜபாளையம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலும், சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த மார்ச் மாதம் முதலும், மின்னணு தேசிய வேளாண்விற்பனை சந்தை இ-நாம் திட்டத்தில் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் திட்டங்கள் மின்னணு தேசியவேளாண் விற்பனைச் சந்தை திட்டத்தின் உத்திகள் மற்றும் பண்ணை அளவிலான வர்த்தகம் குறித்து 2023-2024-ம் ஆண்டின் மானிய கோரிக்கை அறிவித்தபடி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு பயிற்சி அளித்திட அரசு மற்றும் மேலாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனரால் அறிவுறுத்தப்பட்டது.

பயிற்சி

இதனைத்தொடர்ந்து வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை, வேளாண் பொறியியல் துறை, மீன்வளத்துறை, பட்டுப்புழு வளர்ச்சித் துறை, வேளாண்மை உதவி இயக்குனர்கள், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள், விதைசான்று உதவி இயக்குனர், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர், வேளாண்மை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உழவர் சந்தை நிர்வாக அலுவலர்கள், மீன்வள ஆய்வாளர்கள், ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர்கள், மற்றும் மேற்பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் இ-நாம் திட்ட செயல்பாட்டின் உத்திகள் மற்றும் பண்ணை அளவிலான வர்த்தகம் குறித்து வேளாண் விற்பனை குழு செயலாளரால் பயிற்சி வழங்கப்பட்டது.

விளக்க குறிப்பு

அத்துடன் விளக்க குறிப்புகளும் வழங்கப்பட்டது. மேற்கண்ட பயிற்சியின் போது விருதுநகர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வேளாண்மை துணை இயக்குனர், விருதுநகர் விற்பனை குழு தனி அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை இ-நாம் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story