மின் சிக்கன வார விழா
ஆற்காடு அருகே மின் சிக்கன வார விழா நடந்தது.
ராணிப்பேட்டை
ஆற்காடு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஆற்காடு கோட்டம் சார்பாக மின் சிக்கன வார விழா ஆற்காடு அருகே விளாபாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
ஆற்காடு கோட்ட செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார், பள்ளியின் தாளாளர் பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர்.
உதவி செயற்பொறியாளர்கள் ஆற்காடு நகரம் தனலட்சுமி, திமிரி சாந்தி பூஷன், ஆற்காடு கிராமியம் விநாயகம் ,கலவை சித்ரா, மாம்பாக்கம் மெஹபூப் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மின்சார சிக்கனம் குறித்த கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும் மின்சார சிக்கனம் குறித்து மாணவர்களிடம் எடுத்துக் கூறினர்.
Related Tags :
Next Story