புதருக்குள் மறைந்திருக்கும் ஈமக்கிரிகை மண்டபம்
கொள்ளிடம் அருகே புதருக்குள் மறைந்திருக்கும் ஈமக்கிரிகை மண்டபம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே புதருக்குள் மறைந்திருக்கும் ஈமக்கிரிகை மண்டபம் சீரமைக்கப்படுமா? என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஈமக்கிரிகை மண்டபம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரை தெரு அருகே சாலையோரத்தில் மயானம் அமைந்துள்ளது. இந்த மயானத்தில் அதை சுற்றியுள்ள சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் மற்றும் எரியூட்டுகின்றனர். மயானம் அருகே ஈமக்கிரிகை மண்டபம் உள்ளது. இந்த ஈமக்கிரிகை மண்டப கட்டிடம் மிகவும் பழமையானது. இந்த கட்டிடத்தின் சேதமடைந்து காணப்படுகிறது.
புதர் மண்டிக்கிடக்கிறது
அந்த மண்டபத்தின் மீது செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிகிடக்கிறது. இதனால் இந்த மண்டபத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. குறிப்பாக மழை காலத்தில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த கட்டிடத்தைச் செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
சீரமைக்க வேண்டும்
இதன்காரணமாக பொதுமக்கள் இங்கு வரவே அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதருக்குள் மறைந்திருக்கும் ஈமக்கிரிகை மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.