ஏரல்தேவிநட்டார் கொண்ட அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா


ஏரல்தேவிநட்டார் கொண்ட அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் தேவிநட்டார் கொண்ட அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

ஏரல்:

ஏரல் தேவிநட்டார் கொண்ட அம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றிலிருந்து இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து இருந்து கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. நள்ளிரவு 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று( புதன்கிழமை) மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அன்னம் படைத்தல் நடைபெறுகிறது.


Next Story