மண்ணுளி பாம்பு பிடிபட்டது


மண்ணுளி பாம்பு பிடிபட்டது
x

பேராவூரணியில் மண்ணுளி பாம்பு பிடிபட்டது

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பழைய பேராவூரணியில் தனியாருக்கு சொந்தமான தென்னை நாற்று பண்ணையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2½ அடி நீளமும், 2 கிலோ எடையும் கொண்ட மண்ணுளி பாம்பு பிடிபட்டது. அந்த பாம்பை பண்ணையின் உரிமையாளர் லாவகமாக பிடித்து மண் பானையில் பாதுகாப்பாக வைத்திருந்தார். இதுகுறித்து பேராவூரணி தாசில்தார் சுகுமார் மற்றும் வனத்துறையினருக்கு நேற்று தகவல் தெரிவித்தார். பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் குமாரிடம் அந்த பாம்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் காப்புக்காடு பகுதியில் உயிருடன் விடப்பட்டது.


Next Story