வடகாடு பகுதியில் விற்பனைக்கு வந்திருந்த மண்பானைகள்


வடகாடு பகுதியில் விற்பனைக்கு வந்திருந்த மண்பானைகள்
x

வடகாடு பகுதியில் விற்பனைக்கு மண்பானைகள் வந்திருந்தன.

புதுக்கோட்டை

ஆண்டு தோறும் கார்த்திகை பவுர்ணமி முடிந்த பிறகு சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும் பவுர்ணமி தினத்தை சித்ரா பவுர்ணமி தினமாக கருதப்படுகிறது. சந்திரன் மற்றும் சித்திர குப்தரை வணங்கி பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்நாளில் அனைத்து தெய்வ வழிபாடு நடத்துவது சிறந்தது என்றும் கூறப்படுகிறது. இந்நாளில் தான் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இறங்கி அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அந்த வகையில் வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகள் தோறும் சித்ரா பவுர்ணமி பொங்கல் வைத்து இஷ்ட தெய்வங்களை நினைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதான நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இன்று (வெள்ளிக்கிழமை) சித்ரா பவுர்ணமி பொங்கல் வழிபாட்டை முன்னிட்டு வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மண் பாண்ட தொழிலாளர்கள் மூலமாக, மண் பானை, குழம்பு சட்டி, விறகு அடுப்பு போன்றவை விற்பனை மும்முரமாக நடைபெற்று வந்தது. பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் மண் பாண்டங்களை வாங்கி சென்றனர்.


Next Story