கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி


கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி
x

திருவாரூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

ஏசு சிலுவையில் அறைந்த தினமான புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை கடந்த 7-ந் தேதி உலகம் முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடந்தது. இதில் ஏசு இறந்ததை போன்று அவரது சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

அதையடுத்து ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சிறப்பு திருப்பலி

அதன்படி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதில் திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் பகுத்தறி மாணிக்கம் அந்தோணியார் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.


Next Story