வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஈஸ்டர் திருப்பலி


வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஈஸ்டர் திருப்பலி
x

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் ஈஸ்டர் திருப்பலி நடைபெற்றது.

மதுரை

வாடிப்பட்டி

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன் உள்ள 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கின்றனர். அந்த நாட்களில் கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படும். அவர் 3-வது நாள் உயிர்தெழுந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடப்படும். அதன்படி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் தென்மாவட்டங்களின் வேளாங்கண்ணி என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் புனிதவெள்ளியையொட்டி புனிதவார சடங்குகள் 3 நாட்கள் நடந்தது. நேற்று முன்தினம் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு திருவிழிப்பு திருச்சடங்குகள் நடந்தது. நேற்று ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு ஈஸ்டர் பெருவிழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கும், 8.30 மணிக்கும், 11 மணிக்கும், மாலை 5 மணிக்கும் சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிராத்தனைகள் செய்து முடிகாணிக்கை செலுத்தினர். மதுரை, திண்டுக்கல், தேனிமாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக ஆலயத்திற்கு வந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஆரோக்கிய அன்னை திருத்தல பங்குதந்தை வளன் அடிகளார் தலைமையில் நிர்வாக தந்தை அந்தோணி ஜோசப் அடிகளார், அருள்சகோதரர் ஸ்டீபன்பாபு மற்றும் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்தியபிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.


Next Story