ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை
தரங்கம்பாடி பகுதியில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
பொறையாறு:
தரங்கம்பாடி பகுதியில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
ஈஸ்டர் பண்டிகை
பைபிளின் புதிய ஏற்பாட்டின் படி கி.பி 30-ல் இயேசு கிறிஸ்து ரோமானியர்களால் சிலுவையில் அறையப்பட்டு இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு ஈஸ்டர் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்தினம் இரவு அவருடைய சீடர்களுடன் பஸ்கா உணவை பகிர்ந்து கொண்ட தினம் "பரிசுத்த வியாழன்" என்று நினைவு கூறப்படுகிறது. புனிதவெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து பிறகு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். அதற்கு முன்னரே தன் சீடர்களிடம் நான் மரித்த பின் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்று இயேசு குறிப்பிட்டிருந்தார். இயேசு பிரான் உயிர்தெழுந்த நாளினை ஈஸ்டர் பண்டிகை நாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
சிறப்பு பிரார்த்தனை
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புதிய எருசலேம் ஆலயம், புனித சீயோன் ஆலயம், புனித ஜெபமாலை அன்னை ஆலயம்,பொறையாறில் உள்ள புனித பெத்லேகம் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று புனித ஈஸ்டர் பண்டிகை (ஏசு உயிர்தெழுதல்) சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல தரங்கம்பாடி பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபை, உரோமன் கத்தோலிக்க திருச்சபை, தமிழ் நற்செய்தி லுத்தரன் திருச்சபை ஆகிய திருச்சபைகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அந்தந்த தேவாலயங்களுக்கு சென்று பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை அந்தந்த தேவாலயங்களின் மதபோதகர்கள் ரூபன் பிரபு, அருளானந்து, சாம்சன், ஜான் சன் மான்சிங் மற்றும் எட்வின் வில்லியம் ஆகியோர் செய்தனர். இதில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.