மாதுளை பழம் சாப்பிட்ட 1½ வயது குழந்தை சாவு


மாதுளை பழம் சாப்பிட்ட 1½ வயது குழந்தை சாவு
x
தினத்தந்தி 7 May 2023 2:00 AM IST (Updated: 7 May 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மாதுளை பழம் சாப்பிட்ட 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே மாதுளை பழம் சாப்பிட்ட 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1½ வயது குழந்தை

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மாலிக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி பாத்திமா. இவர்களுக்கு 7 வயதில் அப்சல், 1½ வயதில் முகம்மது அர்ஷத் ஆகிய குழந்தைகள் உண்டு.

நேற்று மாலையில் குழந்தை முகம்மது அர்ஷத்துக்கு பெற்றோர் மாதுளை பழத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

பரிதாப சாவு

அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே முகம்மது அர்ஷத் திடீரென்று வாந்தி எடுத்து மயங்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை தூக்கிக் கொண்டு விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை முகம்மது அர்ஷத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவர்கள் குழந்தையை பார்த்து கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தை உடலை பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story