தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2023 2:30 AM IST (Updated: 9 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேனி

தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்புசாரா மின் பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் முனியாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிங்கராஜா முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அவர்கள், கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story