மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்
மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
திருவாரூர்
திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் திருவாரூர் நகரம், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்களுடைய குறைகளை விண்ணப்பம் மூலம் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story