மின்தடை ஏற்படுத்திய மூங்கில் மரங்கள் அகற்றம்


மின்தடை ஏற்படுத்திய மூங்கில் மரங்கள் அகற்றம்
x

மெலட்டூர் பகுதியில் மின்தடை ஏற்படுத்திய மூங்கில் மரங்கள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர்

மெலட்டூர் பகுதியில் மின்தடை ஏற்படுத்திய மூங்கில் மரங்கள் அகற்றப்பட்டன.

மூங்கில் மரங்கள்

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே வடக்கு மாங்குடி தெற்கு தெருவிற்கு செல்லக்கூடிய மின்வழிப்பாதையில் ஏராளமான மூங்கில் மரங்கள் மின்சார கம்பியின் மீது சாய்ந்து காணப்பட்டன. அதனால் மின்தடை ஏற்பட்டு வந்தது. மின்தடை காரணமாக கிராமமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் கவனத்திற்கு கிராமமக்கள் கொண்டு சென்றனர். மின்தடை குறித்து ஊராட்சி மன்ற தலைவர், உடனடியாக மின்வாரிய உதவி பொறியாளருக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அய்யம்பேட்டை மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து மின்சார கம்பிகள் அறுந்து விழும் வகையில் மின்கம்பிகள் மீது சாய்ந்து கிடந்த மூங்கில் மரங்களை அகற்றும் பணியை மேற்கொண்டனர்.

ஆபத்தை ஏற்படுத்தும் வகையில்...

மேலும் மின்சார கம்பிகளை சரிசெய்தனர். மின்கம்பிகளுக்கு இடையூறாகவும் கிராம மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த மூங்கில் மரங்களும் அகற்றப்பட்டன. இதற்கு நடவடிக்கை எடுத்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலர் ஆகியோருக்கு கிராமமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story