ஆபத்தான நிலையில் மின்கம்பம்


ஆபத்தான நிலையில் மின்கம்பம்
x
தினத்தந்தி 21 May 2023 12:45 AM IST (Updated: 21 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருவாரூர்

மன்னார்குடி அருகே ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சாய்ந்த நிலையில் மின்கம்பம்

மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தில் சவளக்காரன் பாசனவாய்க்கால் அருகில் விவசாய நிலம் வழியாக மின் பாதை செல்கிறது. இதையொட்டி அங்கு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கம்பங்களில் ஒன்று வலுவிழந்து சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் மின்கம்பிகளும் தாழ்வான நிலையில் செல்கிறது.

பழுதடைந்த இந்த மின்கம்பம் எந்த நேரத்தில் கீழே சாயுமோ என்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இப்பகுதியை கடக்க வேண்டி உள்ளது. மேலும் மின்கம்பிகளும் தாழ்வாக சொல்வதால் ஏதேனும் மின் விபத்து ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

ஏதேனும் மின்விபத்து ஏற்படும் சூழ்நிலைக்கு முன்பே இதனை சரி செய்து மின் விபத்தினை தவிர்க்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பாப்பையன் கூறியதாவது:-

மின்கம்பம் சேதம் அடைந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக இதுபோல் சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பிகளும் தாழ்வாக செல்கின்றன. இந்த பகுதியில் கால்நடைகள் மேய்ச்சல் விடுவதற்கும் வயலில் வேலை செய்வதற்கும் தினமும் விவசாயிகளும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். சாய்ந்த நிலையில் உள்ள பழுதடைந்த இந்த மின்கம்பம் விழுந்து விவசாய தொழிலாளர்களுக்கும், கால்நடை மேய்ப்பவர்களுக்கும் அசம்பாவிதம் நேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story