மின்கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்


மின்கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
x
திருப்பூர்


உடுமலையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு போதிய கவுண்ட்டர்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.

காத்திருப்பு

உடுமலை நகரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் மின் கட்டணம் செலுத்துவதற்காக உடுமலை-திருப்பூர் சாலையில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு வருகின்றனர். இங்கு பொதுமக்கள் வசதிக்காக 10 க்கும் மேற்பட்ட கவுண்்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது இதில் ஒரு கவுண்ட்டர் மட்டுமே திறக்கப்படுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வருமான இழப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தற்போதைய நிலையில் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பலரும் கடைசி நாளில் தான் மின் கட்டணம் செலுத்துவதற்காக வருகின்றனர்.

ஆனால் ஒரு கவுண்டர் மட்டுமே திறந்திருப்பதால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வேலைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் வருமான இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.மேலும் முதியவர்கள் மற்றும் பெண்கள் வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை ஊக்குவிக்க மின் வாரியம் திட்டமிட்டு வருவது வரவேற்புக்குரிய விஷயமாகவே உள்ளது. ஆனாலும் அனைவராலும் அவ்வாறு கட்டணம் செலுத்த முடிவதில்லை.

எனவே விரைவாக மின் கட்டணம் செலுத்தும் வகையில் உடுமலை மின் வாரிய அலுவலகத்தில் கூடுதல் கவுண்ட்டர்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.


Next Story