மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் திறப்பு


மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் திறப்பு
x
திருப்பூர்


மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும்படி அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உடுமலை மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் அந்தந்த பகுதிகளில் உள்ள 6 மின் அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. உடுமலை-திருப்பூர் சாலையில் உள்ள மேற்பார்வைப்பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மின் கட்டண வசூல் மையத்தில் உள்ள அறையில் மற்றொரு கவுண்ட்டரில் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு நேற்று பலர் வந்திருந்தனர். ஆனால் சர்வர் கோளாறு காரணமாக, பணிகள் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு கூடுதலாக மையம் (கவுண்ட்டர்) அமைக்க வேண்டும் என்பது மின் நுகர்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story