மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் எக்கோ எந்திரம்


மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் எக்கோ எந்திரம்
x

மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் எக்கோ எந்திரத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

விருதுநகர்


விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சென்னையை சேர்ந்த 2 தனியார் தொழில் நிறுவனங்களின் சேவை அமைப்புகள் இணைந்து சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.35.40 லட்சம் மதிப்பிலான எக்கோ எந்திரத்தை வழங்கினர். இந்த எந்திரத்தை ஆஸ்பத்திரியில் உள்ள சிசுக்களுக்கான தீவிர சிகிச்சை மையத்திற்கு கலெக்டர் ஜெயசீலன் வழங்கி எந்திரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.5 கோடிக்கு மேல் நிகர லாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்கள் இதுபோன்ற மருத்துவ சேவை வழங்கக்கூடிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு உதவிகளை சமூக பொறுப்பு நிதியிலிருந்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணி, தனியார் பவுண்டேசன் இணைநிறுவனர் லதா பாண்டியராஜன், அரசு மருத்துவக் கல்லூரி துணைத்தலைவர் குழந்தைகள் நல மருத்துவர் முருகேச லட்சுமணன், முதன்மை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜவகர், டாக்டர்கள், பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story