பொதுமக்கள் சாலை மறியல் எதிரொலி:வீட்டில் மது விற்ற பெண் கைது


பொதுமக்கள் சாலை மறியல் எதிரொலி:வீட்டில் மது விற்ற பெண் கைது
x

பொதுமக்கள் சாலை மறியல் எதிரொலி: வீட்டில் மது விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்

ஈரோடு

ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து வீட்டில் மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

ஈரோடு ராசாம்பாளையம் ரோட்டில் உள்ள எஸ்.எஸ்.பி.நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வலியுறுத்தி கடந்த 30-ந் தேதி பொதுமக்கள் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனா்.

பெண் கைது

இந்தநிலையில் எஸ்.எஸ்.பி.நகரில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் மது பாட்டில்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததாக பாபுவின் மனைவி செல்லாயி (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 12 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Related Tags :
Next Story