பொருளாதார கடன் உதவி முகாம்
சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு பொருளாதார கடன் உதவி முகாம் நடக்கிறது.
சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார மேம்பாட்டு கழகங்களான டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தனிநபர் கடன், சுய உதவிக்குழு சிறுதொழில் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகிய திட்டங்களின் கீழ் கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தாலுகா அலுவலகங்களில் நடைபெற உள்ளது. அதன்படி நவம்பர் 1-ந்தேதி திருவாடானை, 2-ந்தேதி ஆர்.எஸ்.மங்கலம், 3-ந்தேதி கடலாடி, 6-ந்தேதி கமுதி, 7-ந்தேதி முதுகுளத்தூர், 8-ந்தேதி கீழக்கரை, 9-ந்தேதி ராமேசுவரம், 10-ந்தேதி பரமக்குடியில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கலந்து கொண்டு கடன் விண்ணப்பத்துடன் சாதி, வருமானம், இருப்பிடம், ஆதார், ரேஷன் கார்டு, தொழில் விவரம், திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களை வழங்க வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொண்டு விவரம் பெறலாம். இந்த தகவலை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.