எடப்பாடி பழனிசாமி கைது: அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-சாலைமறியல்


எடப்பாடி பழனிசாமி கைது: அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்-சாலைமறியல்
x

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை


எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் ே்பாராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

தமிழக சட்டசபையில் அ.தி.மு.க. சட்டமன்ற துணை தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா தலைமையில் பனகல் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு அக்கட்சியினர் திரண்டனர். பின்பு அவர்கள் ஊர்வலமாக சென்று கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட வில்லாபுரம் ராஜா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் வாகனங்களில் ஏற்றபட்டு மதுரை ஆயுதப்படை திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின் பேரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் கிழக்கு தொகுதி, மேலூர் தொகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார். இதில் தக்கார் பாண்டி, கார்சேரி கணேசன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தமிழக அரசு எதிராக கோஷம் எழுப்பினார்கள். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி

உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் பூமா ராஜா தலைமை தாங்கினார். மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் துரை தனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, சேடபட்டி ஒன்றிய செயலாளர் பிச்சை ராஜன், வழக்கறிஞர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story