எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா: நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
x

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கினார்.

திருநெல்வேலி

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா வழங்கினார்.

பிறந்தநாள் விழா

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க .சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில், இந்து கோவில்கள், தர்காக்கள், கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது. கேக் வெட்டியும் அனைவருக்கும் வழங்கினர்.

பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் அ.தி.மு.க.வினர் ரத்த தானம் செய்தனர்.

நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை வண்ணார்பேட்டையில் 69 கிலோ கேக் வெட்டி பட்டாசு வெடித்து அ.தி.மு.க.வினர் தொண்டர்களுக்கு வழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், அமைப்பு செயலாளர் ஏ.கே. சீனிவாசன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, பொருளாளர் சவுந்தரராஜன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மானூர்

நெல்லையப்பர் கோவிலில் அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பாப்புலர் முத்தையா ஏற்பாட்டில் பாளையங்கோட்டையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழாவையொட்டி மானூர் அம்பலவாண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, மானூர் பஜார் மற்றும் பஸ்நிறுத்தத்தில் இருந்த பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

விழாவில் நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதியோருக்கு மதிய உணவு

நாங்குநேரி அருகே ஏமன்குளம் சகாயநகரில் ஆதரவற்ற முதியோருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கி, உணவு மற்றும் உடைகள் வழங்கினார்.

மாவட்ட மகளிரணி செயலாளர் எம்.ஜான்சிராணி, நாங்குநேரி தெற்கு ஒன்றிய செயலாளர் மா.விஜயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் அல்அமீன் (எ) முகமது அலி, கூட்டுறவு சங்க தலைவர்கள் டி.ராம்குமார், சி.தர்மசீலன், துணைத்தலைவர் எஸ்.பிரதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இனிப்புகள் வழங்கப்பட்டது

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, அ.தி.மு.க. வக்கீல் ஜெயபாலன் பாளையங்கோட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்.

வள்ளியூர்

வள்ளியூர் அருகே கல்மாணிக்கபுரம் மதர் தெரசா முதியோர் இல்லத்தில் முதியோருக்கு உணவு வழங்கபட்டது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்திரராஜன் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்களுக்கு தேவையான பழம், பிஸ்கட் மற்றும் கட்டில் மெத்தை போன்றவைகளை வழங்கினார்.

மேலும் அங்கு தங்கியிருக்கும் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மாவட்ட மகளிர் அணி தலைவியும், திசையன்விளை பேரூராட்சி தலைவியுமான ஜான்சிராணி, ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.செல்வராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா, வள்ளியூர் நகர செயலாளர் பொன்னரசு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி

சேரன்மாதேவியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அம்ைப சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் ஏற்பாட்டில், சேரன்மாதேவி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு மற்றும் இனிப்புகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, சேரை நகர செயலாளர் பழனிகுமார், அவைத் தலைவர் இசக்கிமுத்து, முன்னாள் நகர செயலாளர் ஐசக் பாண்டியன், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன் பாபு, கூட்டுறவு சங்க தலைவர் முருகன் நயினார், துணைத் தலைவர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

விக்கிரமசிங்கபுரத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன்பாபு, கவுன்சிலர்கள் கிறாஸ் இமாகுலேட், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள 48 வாக்குச்சாவடிகளுக்கு பூத் கமிட்டி அமைக்க வேண்டும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வார்டு செயலாளருடன் 19 பேர் என மொத்தம் 20 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறினார்.

இதில் அவைத் தலைவர் அரிச்சந்திரன், முன்னாள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், நகர துணை செயலாளர் மரிய சாந்தா ரோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story