சத்தியமங்கலத்தில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்


சத்தியமங்கலத்தில்  விடைத்தாள் திருத்தும்   ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
x

ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் வினாத்தாள் மதிப்பீடு செய்வதற்கு வந்த ஆசிரியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து முதுகலை ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கூடத்தின் நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படியை உயர்த்தி தர வேண்டும் மற்றும் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன்னுசாமி, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story