வேளாண்மை துறை சார்பில் பெரியூர் அரசு பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்-கலெக்டர் சாந்தி வழங்கினார்
தர்மபுரி
தர்மபுரி:
பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் வத்தல்மலை நீர்வடி பகுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேளாண்மை துறையின் சார்பில் நீர்வடி பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் வத்தல்மலை பெரியூர் அரசு மேல்நிலைபள்ளிக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பில் வகுப்பறைகளில் மாணவர்கள் அமர்வதற்கு பயன்படும் 20 இருக்கைகளை பெரியூர் அரசு பள்ளிக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் விஜயா, உதவி இயக்குனர் சகாயராணி, வேளாண்மை உதவி பொறியாளர் பத்மாவதி, பெரியூர் பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ், அக்ரி அருண்ராஜ், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story